தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனக சபை தரிசனத்திற்கு தீட்சிதர்கள் மறுப்பு... மீண்டும் பரபரப்பான சிதம்பரம் நடராஜர் கோயில்..! - கனக சபை தரிசனத்திற்கு தீட்சிதர்கள் மறுப்பு

Chidambaram Temple: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் 4 நாட்கள் கனக சபை தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கனக சபை தரிசனத்திற்கு தீட்சிதர்கள் மறுப்பு
கனக சபை தரிசனத்திற்கு தீட்சிதர்கள் மறுப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 6:57 PM IST

கனக சபை தரிசனத்திற்கு தீட்சிதர்கள் மறுப்பு

கடலூர்:கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை (டிச.26) தேரோட்ட விழாவிற்காக மூலவரான நடராஜ பெருமானே உற்சவரராக செல்கிறார். இந்த நிலையில், இன்று (டிச.25) முதல் வரும் 28 ஆம் தேதி வரை கனக சபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடைவிதித்து கனகசபையின் கதவு தீட்சிதர்களால் மூடப்பட்டது.

இதற்கு, ஆட்சேபனை தெரிவித்து கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் தலைமையில் சிதம்பரம் கோயில்களின் வட்டார ஆய்வாளர் நரசிங்கபெருமாள் தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் போலீசார் பாதுகாப்புடன் கோயிலின் பொது தீட்சர்களிடம் அரசாணையின்படி பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தினர்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடையணை பெறப்பட்டுள்ளதாகவும், இந்த 4 நாட்கள் மட்டும் பக்தர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். அப்படியானால் நீதிமன்ற தடை ஆணையை கொடுங்கள் என இந்து சமய அறநிலையத்துறையினர் தீட்சிதர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கு நிலுவையில் உள்ளதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அறநிலை துறை அதிகாரிகள் அதனை ஏற்க முடியாது எனவும் பக்தர்களை வழக்கம் போல் கனக சபை மீது ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் எனவும், வலியுறுத்தி திரும்பி சென்றனர். இதனால் மீண்டும், நடராஜர் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே போன்று நடராஜர் ஆலய ஆணி திருமஞ்சனத்தின் பொழுது 4 நாட்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட பொழுது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் இதே நிலை எழுந்துள்ளதால் நடராஜர் ஆலயத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதையும் படிங்க:சிதம்பரத்தில் 72 கிலோ சாக்லேட்டில் 3 அடி உயர நடராஜர் சிலை செய்து அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details