கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட கே.என்.பேட்டையில் மகேஸ்வரி கந்தசாமி என்பவரது வீட்டில் இருந்து பல டன் எடையுள்ள போதைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
ரூ. 2 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் அழிப்பு - போலீசார் அதிரடி - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
கடலூர்: ரூ. 2 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை காவல் துறையினர் எரித்து சாம்பலாக்கினர்.
கடலூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு
இந்த போதைப்பொருள்களின் மதிப்பு 2 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. பின்னர் போதைப் பொருள்களை அழிப்பதற்கு காவல் துறையினர் நீதிமன்றத்தில் அனுமதிக் கோரினர். நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில், கம்மியம்பேட்டை பகுதியில் வைத்து போதைப் பொருள்களை காவல் துறையினர் எரித்து சாம்பலாக்கினர்.
இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல்!