கடலூர்:வடலூர் அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு (54). கடந்த 2017ஆம் ஆண்டு சவுதி அரேபியா உள்ள ரியாத்திற்கு வேலைக்குச் சென்றார். கடந்த 21ஆம் தேதி அன்பு, ரியாத்தில் உள்ள ஒரு கடையில் தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கிய நிலையில் திடீரென அன்புக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
வெளிநாட்டில் உயிரிழந்த தந்தை - உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மகள் கோரிக்கை
வெளிநாட்டில் மாரடைப்பால் உயிரிழந்த தந்தையின் உடலை மீட்டுத் தரக் கோரி சிசிடிவி காட்சிகளுடன் ஆட்சியரைச் சந்தித்த மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், அன்பு மகள் கிரிஜா சவுதி அரேபியாவில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை மீட்டுத் தர வலியுறுத்தி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தன்னிடம் உள்ளதாக கூறி அதனையும் மாவட்ட ஆட்சியரிடம் பாலசுப்பிரமணியரிடம் காட்டினார். கிரிஜா அளித்த மனுவை பெற்றுக் கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் இந்த உடலை கொண்டுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க:நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணிக்கு முதலுதவி செய்த மத்திய பாதுகாப்பு படை வீரர் ...