ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் 2ஆவது வியாழக்கிழமையன்று உலக தர தினம் "தூய்மை பேணுவோம் சுகாதாரம் காப்போம்" என்ற அடிப்படையில் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் தேசிய வளர்ச்சி மற்றும் செழிப்பினை மக்களின் பங்களிப்புடன் உயர்த்துவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உலகளவில் எடுத்துரைப்பது நோக்கமாகும்.
அதனடிப்படையில் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சிபள்ளி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் வெ. அன்புச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணி அரசு தலைமை மருத்துவமனை வளாக பகுதிகளில் சென்று "தூய்மை பேணுவோம் சுகாதாரம் காப்போம்" என்று செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் முழக்கமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.