தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2020, 3:09 PM IST

ETV Bharat / state

ஒரே எண்ணிக்கை - கடலூர் ஒன்றிய தலைவர் தேர்தலில் குழப்பம்!

கடலூர்: அதிமுக, திமுக என இரு கட்சிகளும் சமபலத்துடன் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதால் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Cuddalore Union Leadership
Cuddalore Union Leadership

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுவதையொட்டி பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக, பாமக மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 21 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர்களும் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்ய நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தற்போது நல்லூர் ஒன்றிய தேர்தல் அலுவலர் ரவிசந்திரன் உடல்நிலை சரியில்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வராமல் மருத்துவமனையில் உள்ளதால், ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுமா என இரு கட்சியினரும் சந்தேகத்தில் இருந்தனர். இதன் காரணமாக இரு கட்சியினரும் ஒன்றிய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் நல்லூர் ஒன்றியத்திற்கு தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடலூர் ஒன்றிய தலைவர் தேர்தலில் நீடிக்கும் குழப்பம்

இதைப்போல் மங்களர் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக 12 உறுப்பினர்களும் திமுக 12 உறுப்பினர்களும் கொண்டு சமபலத்தில் உள்ளன. இதனால் தேர்தல் அலுவலர் குலுக்கல் முறையில் வெற்றி தேர்வு செய்யலாம் என தெரிவித்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதினால் அங்கும் தேர்தல் நிறுத்தப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு பேருந்து - எவ்வளவு பேர் பயணம்?

ABOUT THE AUTHOR

...view details