கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த அமுல்தாஸ் என்பவரின் மகன் ராமச்சந்திரன் (20). இவர் விருத்தாச்சலத்தில் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தனக்கு இருசக்கர வாகனம் வாங்கி தரும்படி பெற்றோர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.
இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!
கடலூர்: இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன், வீட்டில் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: காவல் துறை விசாரணை!