கடலூர் துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம்(65). அவர் வைத்திருந்த ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மீன்பிடித் தளத்தில் தவறவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பணத்தை தவறவிட்ட மூதாட்டி: கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறையினர் - மூதாட்டி
கடலூர்: ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தவறவிட்ட மூதாட்டியிடம் பணத்தை கண்டுபிடித்து காவல் துறையினர் அவரிடமே ஒப்படைத்தனர்.
oldlady
அதன் பேரில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கீழே கிடந்த பணத்தை எடுத்துச் சென்ற முருகேசன் என்பவரை அடையாளம் கண்டு அவரிடமிருந்து பணத்தை மீட்டு தவறவிட்ட மூதாட்டி சிவபாக்கியத்திடம் மீண்டும் பணத்தை ஒப்படைத்தனர்.