தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! - nivar cyclone latest updates

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, தாழ்வு மண்டலமாக நவம்பர் 25ஆம் தேதி மாறி காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புயலாக கரையை கடக்கக்கூடும் என்பதால், கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நிவர் புயல் கடலூர், நிவர் புயல் எச்சரிக்கை, nivar cyclone alert, nivar cyclone updates, nivar cyclone latest updates
nivar cyclone alert

By

Published : Nov 23, 2020, 11:25 AM IST

கடலூர்: நிவர் புயல் எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, தாழ்வு மண்டலமாக நவம்பர் 25ஆம் தேதி மாறி காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நிவர் புயல் கரையை கடக்கக்கூடும் என்பதால், கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கடலூர் துறைமுகம், தேவனாம்பட்டினம் மற்றும் தாழங்குடா கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

நிவர் புயல் எச்சரிக்கை

இதற்கிடையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, அனைத்து துறை அரசு அலுவலர்களும், மாவட்டத்தின் தலைமை இடத்தில் தங்கி அவ்வப்போது மழை நிலவரத்தை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details