கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது மீண்டும் முழுவீச்சில் நடபெற்றுவருகிறது. புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடலூருக்கு பல்வேறு வகையான மதுபாட்டில்கள், சாராயம் கடத்துவது தொடர் கதையாகிவருகிறது.
இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்று கள்ளச்சாராயத்தை கூவிக்கூவி விற்பனை செய்யும் காணொலி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.