கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடலூரில் நேற்று பேருந்து சேவை தொடங்கியது. கடலூர் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காய்கறிச்சந்தை கடலூர் - சிதம்பரம் செல்லும் சாலையில் மாற்றியமைக்கப்பட்டது.
இதனை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சித்திரப்பாவை என்ற பெண்ணும் அவரது மகன் சுஜித்தும் வந்துகொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் சிக்கிய தாயையும் மகனையும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மீட்டு வட்டாட்சியர் செல்வக்குமாரின் காரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.