தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் ஆற்றுத் திருவிழாவுக்கு தடை

கரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், ஆற்றுத் திருவிழா நாளில் தீர்த்தவாரி உற்சவத்தன்று சாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் பொது வெளிக்கு கொண்டு வருவதை தவிர்த்து ஆலயங்களில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Cuddalore
Cuddalore

By

Published : Jan 15, 2021, 8:03 PM IST

கடலூர்: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆலயங்களிலேயே தீர்த்தவாரி நடத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களான பிச்சாவரம், தேவனாம்பட்டினம், வெள்ளி கடற்கரை, தாழங்குடா கடற்கரை, சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய பகுதிகளிலும், பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, வெள்ளாறு, பரவனாறு, உப்பனாறு, வல்லம்படுகை, கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஆற்றுத் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், ஆற்றுத் திருவிழா நாளில் தீர்த்தவாரி உற்சவத்தன்று சாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் பொது வெளிக்கு கொண்டு வருவதை தவிர்த்து ஆலயங்களில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details