தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் - முழு ஊரடங்கு உத்தரவு

கடலூர்: மாவட்டத்தில் அரசின் முழு ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சாகமூரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு

By

Published : Jul 13, 2020, 8:56 AM IST

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி ஊரடங்கு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் கிருமி நாசினிகள் தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொண்டு சுற்றுப்புற சூழலில் நோய் பரவாத வண்ணம் பராமரிக்க வேண்டும். இளைஞர்கள், பொதுமக்கள் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தவிர்த்து முகக்கவசம் அணிந்து நோய்த்தொற்றை கட்டுப்பாட்டில் வைக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் நோய் தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் காக்கும் வண்ணம் சமூக பரவலை தடுக்க தகுந்த இடைவெளியை பின்பற்றிட வேண்டும்.
அரசு அறிவித்த நான்கு ஞாயிற்றுக்கிழமைகளை உள்பட பிற நாள்களிலும் பொதுமக்கள் இதுபோன்றே சமூக பரவலை கட்டுப்படுத்த தகுந்த இடைவெளியை மேற்கொள்ள வேண்டும். மேலும் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தாங்களே முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பான மருத்துவ தகவல்களை பெற மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், “கிராம கண்காணிப்பு குழு, வருவாய்த் துறை, வளர்ச்சித் துறை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்களாகிய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: என்.எல்.சி வெடித்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details