தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2020, 3:46 AM IST

Updated : Oct 11, 2020, 12:40 PM IST

ETV Bharat / state

பட்டியலின ஊராட்சி தலைவருக்கு அவமரியாதை: செயலாளர், வார்டு உறுப்பினர் கைது!

கடலூர்: பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

cuddalore-dalit-panchayat-president-made-to-sit-in-floor-issue-two-persons-arrested
cuddalore-dalit-panchayat-president-made-to-sit-in-floor-issue-two-persons-arrested

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 100 குடும்பங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்தவர்கள்.

600க்கும் மேற்பட்டோர் மாற்று சமூகத்தினர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் 1 உறுப்பினர் ஆதிதிராவிடர் மீதி 5 பேர் மாற்று சமூகத்தினர்.

சாதிய ஆதிக்க சிந்தனையில் ஊராட்சித் தலைவர் ஆதிதிராவிட சமூகம் என்பதால் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றகூடாது என்றும், ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடைபெறும் போது ஊராட்சி தலைவர் மற்றும் ஆதிதிராவிட ஊராட்சி உறுப்பினர் தரையில் அமர வேண்டும். மற்ற சமூகத்தினர் 5 பேர் நாற்காலியில் அமர வேண்டும் என துணைத்தலைவராக உள்ள மோகன் ராஜன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கடந்த சுதந்திர தினத்தின் போது ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடாமல் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் துணைத் தலைவர் மோகன்ராஜா தடுத்து தேசியக்கொடியை ஏற்றியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தரையில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்கள் நாற்காலியில் அமர்ந்த புகைப்படம் வெளியாகியது. தெற்கு திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா, துணைத் தலைவர் மோகன்ராஜா, வார்டு உறுப்பினர் சுகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

பட்டியலின ஊராட்சி தலைவருக்கு அவமரியாதை, துணைத் தலைவர் கைது

மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற செயலர் சிந்துஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புவனகிரி காவல் துறையினர் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக வார்டு உறுப்பினர் சுகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள துணைத்தலைவர் மோகன் ராஜனை காவல் துறையினர் வருகின்றனர்.

இதையும் படிங்க:பட்டியலின ஊராட்சி தலைவருக்கு அவமரியாதை: உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி

Last Updated : Oct 11, 2020, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details