தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாளச் சாக்கடை பள்ளத்தில் விழுந்த மாடு மீட்பு! - Fire department

கடலூர்: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த மாட்டை ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

cuddalore-cow-rescued-from-drainage

By

Published : Jun 3, 2019, 8:32 AM IST

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உழவர் சந்தை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி கடை நடத்திவருகின்றனர். இந்தக் கடையில் உள்ள குப்பைகளை உழவர் சந்தைக்கு வெளிப்புறத்தில் வியாபாரிகள் கொட்டுகின்றனர்.

உழவர் சந்தைக்கு வெளியே பாதாள சாக்கடை தோண்டும் பணி நடைபெற்றுவருவதால், அந்த பள்ளம் தற்போது குப்பைகளால் நிறைந்துள்ளது. இந்நிலையில் அந்தக் குப்பைகளை உண்பதற்காக வந்த மாடு ஒன்று பள்ளத்தில் சிக்கியது.

இதையடுத்து உழவர் சந்தையில் இருந்த வியாபாரிகள் இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மாட்டை மீட்டனர்.

மாடு மீட்கப்பட்ட காட்சி

ABOUT THE AUTHOR

...view details