தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் நேற்றுவரை கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 487ஆக இருந்தது. இன்று மேலும் 2 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது.