தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று இணையதளத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 29 ஆயிரத்து 30 பேர் தேர்வு எழுதினர். இதில், ஆண்கள் 13 ஆயிரத்து 320 பேரும் பெண்கள் 15 ஆயிரத்து 710 பேரும் தேர்வு எழுதினர்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு : கடலூரில் 86.33 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி - Cuddalore district News
கடலூர் : 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 86.33 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Cuddalore 12th exam results
ஆண்கள் 10 ஆயிரத்து 950 பேரும் பெண்கள் 14 ஆயிரத்து 111 பேரும் என மொத்தம் 25 ஆயிரத்து 61 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 82.27 விழுக்காடும், பெண்கள் 89.85 விழுக்காடும் என மொத்தம் 86.23 விழுக்காட்டினர் கடலூரில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதாதவர்கள் வரும் 27ஆம் தேதி மறு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 30ஆவது இடத்தில் உள்ளது.