தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கூட்டணி கட்சியினர் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடலூர் தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பின்போது வாகன பேரணியில் ஈடுபட்டார்.
பரப்புரை கடைசி நாளில் 'கெத்து காட்டிய' பாமக வேட்பாளர் - மக்களவை தேர்தல்
அதிமுக தலைமையிலான கூட்டணியில் கடலூர் தொகுதிக்கான பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தனது தொண்டர்கள் புடைசூழ அவர் வாகன பேரணியில் ஈடுபட்டார்.
பாமக வேட்பாளர்
இந்த வாகன பேரணி திட்டக்குடியில் தொடங்கி விருத்தாசலம், பண்ருட்டி, கடலூரில் முடிவுற்றது. இவருடன் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.