தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையை அடுத்தபடியாக கடலூர் கரோனா வைரசால் அதிகளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
நேற்றுவரை கடலூர் மாவட்டத்தில் 427 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கடலூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது.