தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’முடிவுக்கு வருகிறது கரோனா இரண்டாம் அலை’- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை முடிவுக்கு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

By

Published : Jul 3, 2021, 8:32 PM IST

கடலூர்: கரோனா தொற்று நோயாளிகளுக்கு தாமதமில்லாமல் சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ‘ஜீரோ டிலே வார்டு’ அமைக்கப்பட்டுவருகிறது.

தாமதமில்லா கரேனா சிகிச்சை பிரிவு

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தாமதமில்லாமல் கரேனா சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஜூலை.3) திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்தி மையத்தையும் திறந்து வைத்தார்.

கரோனா மூன்றாம் அலை

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,’தமிழ்நாட்டில் கரோனோ தொற்று இரண்டாவது அலை முடிவுக்கு வருகிறது. மூன்றாவது அலை வந்தால் சமாளிக்க தயாராக இருக்கிறோம்.

ஒன்றிய அரசு அறிவித்ததன் பெயரில் இன்று கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வசதி செய்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயார்

நெல்லிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 750 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக மேலும் 130 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனை மையம் - கரோனா பாதுகாப்பு மையங்கள் எண்ணிக்கை குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details