தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்கள் மீது குவியும் புகார் - 4 பேர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்கள் மீது குவியும் புகாரின்பேரில் 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கறிஞர் ராஜி பேட்டி
வழக்கறிஞர் ராஜி பேட்டி

By

Published : Jun 21, 2022, 7:30 PM IST

கடலூர்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. பல்வேறு புகார்கள் சர்ச்சைகள் என சிக்கித்தவிக்கும் இந்த ஆலயம் குறித்து கோயில் நலம் விரும்பிகள் கருத்து தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறையினர் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் இக்கோயிலை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தீட்சிதர்கள் மீது அதிர்ச்சியூட்டும் பல குற்றவியல் தகவல்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மக்கள் அதிகாரம் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஆதாரங்களுடன் நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர். மக்கள் அதிகாரம் இயக்கத்தை சார்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தனது அமைப்பினருடன் நேற்று கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

வழக்கறிஞர் ராஜி பேட்டி

அதில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஒரு தீட்சிதரின் 12ஆவது படிக்கும் 17 வயது சிறுவனுக்கும், மற்றொரு தீட்சிதரின் 11ஆவது படிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் சிதம்பரம் கீழவீதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாகவும் அதற்கான ஆதாரத்துடன் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அவர்கள் இந்த புகாரை அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது சம்பந்தமாக 3 தீட்சிதர்கள் மற்றும் திருமண மண்டப மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்: வெற்றிக்கான மாற்றுவழிகளை சொல்லும் உளவியலாளர்

ABOUT THE AUTHOR

...view details