கடலூரில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் வணிக வளாகங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் அறிவுரையின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மதுபானக்கூடங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக அத்தியாவசியப் பொருள்கள் உணவு, பால், மருந்து போன்ற நிறுவனங்களைத் தவிர்த்து, 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் வணிக வளாகங்களை மூட வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கரோனா பீதி: கீழடியில் பார்வையாளர்களுக்குத் தடை!