கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புசெல்வன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், வருகிற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் செல்போனிற்கு தடை- மாவட்ட தேர்தல் அலுவலர் - செல்போனிற்கு தடை
கடலூர்: வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்
பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி 210இல் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.