கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றார்.
பொதுமக்கள் அளித்த இந்த மனுக்களைத் தீர ஆராய்ந்து கள ஆய்வு செய்தும் விதிமுறைகளுக்குட்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்குத் தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வங்கிக்கடன் மானியத்திற்கான காசோலை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கல்! - 25 ஆயிரம் வங்கிக்கடன்
கடலூர்: மூன்று மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் வங்கிக்கடன் மானியத்திற்கான காசோலையை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வழங்கினார்.
வங்கிக்கடன் மானியத்திற்கான காசோலை
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைக் காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்கள் விரிவான பதில் அளிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன், தனித் துணை ஆட்சியர் பரிமளம், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.