கடலூர் மாவட்டம், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து சேத்தியாத்தோப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் முதல்வராகப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டினார். ஆனால், அத்தனை போராட்டங்களையும் அரசு முறியடித்துள்ளது. எந்த சக்தியாலும் அதிமுக அரசை எதுவும் செய்ய முடியாது.
ஸ்டாலினின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பரப்புரை! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கடலூர்: அதிமுக ஆட்சியை அகற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பல போராட்டங்களை நடத்தினார் என்றும், அவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மேலும், கடலூர் மாவட்டத்தில் பருவகாலங்களில் பெய்யும் மழை நீரைத் தேக்கி பயன்படுத்த தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடி மதிப்பில் கதவணைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது எனவும் அவர் பேசினார்.