கடலூர்: வெள்ளப்பாதிப்பு (Cuddalore Flood) அதிகமாக ஏற்பட்ட பெரிய கங்கனாங்குப்பம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள பூவாலை கிராமத்தில் மத்திய ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் ராஜீவ் சர்மா, இணைச் செயலாளர் & FA, NATGRID, உள்துறை அமைச்சகம்; விஜய் ராஜ்மோகன், இயக்குநர் (IT), வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை; ரணஞ்சய் சிங், பிராந்திய அலுவலர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்; எம்.வி.என். வரபிரசாத், துணைச் செயலாளர், ஆர்.எச். ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர்.
கடலூர் அருகே உள்ள கங்கனாகுப்பத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகப் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள், வீடுகள், பாலங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.