கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புறவழிச்சாலை பொன்னேரி அருகில் நெய்வேலியிலிருந்து நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்று, சாலையோரம் நடந்துசென்ற பாதசாரிகள் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியாகினர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விருத்தாசலத்தில் கார்மோதி 2 பேர் பலி! - கடலுார்
கடலுார்: விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள சாலையோரம் நடந்துசென்ற பாதசாரிகள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
cuddalore
மேலும், இந்த விபத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் இறந்தவர்களின் விபரம்:
- ராஜேந்திரன் - தந்தை பெயர் கந்தசாமி (45). மேட்டுத் தெரு, பொன்னேரி கிராமம், விருத்தாசலம் வட்டம்.
- வரதராஜன் - தந்தை பெயர் மாணிக்கம். கண்டத்தை பேட்டை கிராமம், விராகன் அஞ்சல் செந்துறை, தாலுகா, அரியலுார் மாவட்டம்.