தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுயேட்சையாக வேட்புமனு! - nominated

கடலூர்: பாஜக கட்சியில் அகில இந்திய அளவில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுயேட்சையாக வேட்புமனு!

By

Published : Mar 27, 2019, 7:58 AM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் துரை செந்தாமரைக்கண்ணன் சுயேச்சையாக கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வனிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் கோவிந்தசாமி, அத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாஜக கட்சியில் யாதவா சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி, இவர் இவ்வாறு சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுயேட்சையாக வேட்புமனு!

ABOUT THE AUTHOR

...view details