இது குறித்து கல்லூரி முதல்வர் ராஜகுமார் கூறியதாவது:
கடலூர் அரசு கலைக்கல்லூரியில் நாளை ஒருநாள் விண்ணப்பம் விநியோகம் நீட்டிப்பு - விண்ணப்பம்
கடலூர்: பெரியார் அரசு கலைக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் விநியோகம் இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அரசு கலைக்கல்லூரியில் நாளை ஒருநாள் விண்ணப்பம் வினியோகம் நீட்டிப்பு
2019 -20ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் நாளை மாலை 4 மணி வரை விநியோகிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 27ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது.
- மே 28ஆம் தேதி கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், புள்ளியியல், இயற்பியல், பொது வேதியியல் படங்களுக்கும்,
- மே 29ஆம் தேதி காலை 9 மணிக்கு தொழில்முறை வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் காட்சித் தகவலியல் பாடங்களுக்கும் - மதியம் 2 மணிக்கு வணிகவியல் பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
- மே 30ஆம் தேதி காலை 9 மணிக்கு பொருளியல், வரலாறு அரசியல், அறிவியல், பொது நிர்வாகம் படங்களுக்கும் - மதியம் 2 மணிக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய படங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.