தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.5,000 லஞ்சம்: மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

கடலூர்: மின் இணைப்பு தர ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது
மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

By

Published : Apr 22, 2021, 1:16 AM IST

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்திற்குள்பட்ட கொளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் நல்லதம்பி. இவர் தனது மாவு மில்லுக்கு புதிய மின் இணைப்பு வழங்கக்கோரி, அடரி மின்சார வாரிய வணிக ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்தார்.

அதற்கு ரவிச்சந்திரன், புதிய மின் இணைப்புக்கு அரசு கட்டணம் 3,418 ரூபாய், தனக்கு 6,500 ரூபாய் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படி கூறினார்.

இதையடுத்து நல்லதம்பி கடலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி மெல்வின்ராஜசிங் தலைமையிலான காவல் துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்கும்படி கூறினர்.

அதன்படி நல்லதம்பி 5,000 ரூபாயை கொடுத்தார். அதனை ரவிச்சந்திரன் வாங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவ ஊழியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details