தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல்போல் காட்சியளிக்கும் விவசாய நிலங்கள் - cuddalore news in tamil

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் சுமார் 20ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

agricultural lands look like a sea in Cuddalore
கடலூரில் கடல்போல் காட்சியளிக்கும் விவசாய நிலங்கள்; கழுகுப் பார்வையில்!

By

Published : Dec 7, 2020, 4:37 PM IST

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி, பெருமாள் ஏரி உட்பட அனைத்து ஏரிகளும் முழு கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து ஏரியிலிருந்து நீர் தற்போது வெளியேற்றப்பட்டுவருகிறது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், சிதம்பரம் சாலையில் உள்ள பூவனிகுப்பம், ஆலப்பாக்கம் பகுதிகளில் சம்பா பயிரிடப்பட்டிருந்த 20ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இன்னும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை பெய்யாவிட்டாலும் விளைநிலங்களிலிருந்து தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பிருப்பது போல் தெரியவில்லை.

கடலூரில் கடல்போல் காட்சியளிக்கும் விவசாய நிலங்கள்

ஏராளமான பயிர்கள் முற்றிலும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதரம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.

இதையும் படிங்க:நிவர் புயலில் சிறப்பாக பணியாற்றிய மீட்பு குழுவினருக்கு பிரியாணி விருந்து!

ABOUT THE AUTHOR

...view details