தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய அதிமுகவினர் - கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் : தன்னார்வலர்களுக்கு வழங்க முகக்கவசம், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை அதிமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

ADMK give corona tablet to Collector
ADMK give corona tablet to Collector

By

Published : Sep 18, 2020, 10:56 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் அதிமுக சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில்,கடலூரில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர்களுக்கு வழங்க அதிமுக சார்பில் 5 ஆயிரம் முகக் கவசங்கள், 5 ஆயிரம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகளை அனைத்திந்திய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரியிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மத்திய மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details