கடலூர் மாவட்டம், அணுகம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (50). விவசாயியான இவரது வீட்டிற்கு வந்த சாமியார்கள் இருவர் வீட்டில் இருந்த வெங்கடேசனின் மகள் கல்விக்கரசியை பார்த்து பேய் பிடித்துள்ளது என்றும், பேயை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அவர் போட்டுள்ள தங்க நகைகள், தாலி செயின் உள்ளிட்டவற்றை சுடுகாட்டில் வைத்து பூஜை செய்தால்தான் பேய் போகும் என தெரிவித்துள்ளனர்.
பேய் விரட்டுவதாக கூறி நகைகள் அபேஸ் - போலி சாமியார்கள் கைவரிசை - Fake Pretenders
கடலூர்: பேய் விரட்டுவதாக கூறி விவசாயிடமிருந்து நகைகளை திருடிச் சென்ற சாமியர்களை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதை நம்பிய வெங்கடேசன் மகள் அணிருந்திருந்த நான்கு பவுன் தங்க நகைகளை சாமியார்களிடம் கொடுத்துள்ளார். அவர்களும் நகையை வாங்கி வெங்கடேசனை அழைத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். சுடுகாட்டிற்கு அருகே சென்றதும் இருவரும் அவரை வெளியில் நிற்க வைத்துவிட்டு பூஜை செய்துவிட்டு வருவதாக கூறியுள்ளனர்.
சுடுகாட்டிற்கு உள்ளே சென்றவர்கள் வெகுநேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த வெங்கடேசன் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் நகைகளுடன் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற போலிச் சாமியார்களை தேடிவருகின்றனர்.