கடலூர்:பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவர் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 3 பிள்ளைகள். இவர்களது மகனான அர்ஜுன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது
நேற்று இரவு (ஜூலை 18 ) முருகன் மதுகுடிக்க பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்து விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பிறகு நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த முருகன் மனைவி என்று நினைத்துக் கொண்டு , தூங்கிக்கொண்டிருந்த மகன் அர்ஜுனின் தலையில் குழவிக் கல்லை தூக்கிபோட்டுள்ளார்.