கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளன. இதனால் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இலவசமாக மூன்று கிலோ தக்காளி வழங்கிய வியாபாரி - கடலூர் மாவட்டம் பண்ரூட்டியை சேர்ந்த மோகன் என்ற தக்காளி வியாபாரி
கடலூர்: ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வீடு வீடாக சென்று மூன்று கிலோ தக்காளியை வியாபாரி வழங்கினார்.
இலவசமாக மூன்று கிலோ தக்காளி வழங்கிய வியாபாரி
மக்கள் 21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த மோகன் என்ற தக்காளி வியாபாரி நேற்று பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 3 கிலோ தக்காளியை 700 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கினார்.