தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு; குடியரசு தலைவர்,பிரதமர் இரங்கல்

கடலூர் கெடிலம் ஆற்றில் 7 பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

president condolence
குடியரசு தலைவர் இரங்கல்

By

Published : Jun 6, 2022, 10:46 AM IST

Updated : Jun 6, 2022, 12:35 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் நேற்று (ஜூன் 5) தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் ஏழு பேர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் நவநீதம், அவரது மருமகளும் குணாள் மனைவியுமான பிரியா (19), உறவினர்களான ராஜகுரு, மகள்கள் பிரியதர்ஷினி (13), காவியா (11) ஆகியோர் குளிக்கச் சென்று சேற்றில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற முத்துராமன் மகள் சுமதா (16), அமர்நாத் மகள் மோனிகா (16), சங்கர் மகள் சங்கவி (15) ஆகியோரும் சிக்கி கொண்டனர். அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பதிவில்,”இந்த நிகழ்வினை அறிந்து தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் , அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கெடிலம் ஆற்றில் மூழ்கி இறந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி

Last Updated : Jun 6, 2022, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details