தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டம் திருவதிகையில் உள்ள 210ஆவது வாக்குச்சாவடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காசி தங்கவேல் பெயருக்கான பட்டன் இல்லாததை தொடர்ந்து, அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
திருவதிகையில் 66% வாக்குகள் பதிவாகின! - கடலூர்
கடலூர்: கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவதிகையில் உள்ள 210ஆவது வாக்குச்சாவடியில் 66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து திருவதிகையில் இன்று காலை 7 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்த வந்த நிலையில் 11 மணிக்கு மேல் மந்தமான நிலை ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தமுள்ள 657 வாக்காளர்களில் கடந்த முறை 546 பேர் வாக்களித்தனர். இது 83 விழுக்காடு வாக்கு பதிவாகும். அனால் இன்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 437 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதனால, கடந்த முறையை காட்டிலும் 17 விழுக்காடு குறைந்து, 66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.