கடலூரில் தற்போது கரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நாற்பதாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இவர்கள் அனைவரையும் கடலூர் விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையின்போது தொற்றுள்ளவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
கரோனா: கடலூரில் ஒரேநாளில் புதிய பாதிப்பு 37, குணமடைந்தோர் 13
கடலூர்: கடலூரில் நேற்றுவரை கரோனா தொற்றால் ஆயிரத்து மூன்று பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடலூரில் கரோனா நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 627 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் 13 பேர் சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து தற்போது வரை கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து 640 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு முன்பு கல்லூரியின் தலைமை ஆசிரியர், இப்போது முறுக்கு வியாபாரி!