கடலூர் மாவட்டம் கோண்டூரை சேர்ந்தவர் செல்வராஜ்(54). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும், இவருடைய மனைவி அல்லி, புதுச்சேரியில் உள்ள போப் ஜான் பால் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்று விட்டனர்.
பேராசிரியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை - jewel theft
கடலூரில்: பேராசிரியர் வீட்டில் 27 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 26 பவுன் நகை மற்றும் ரூ.43 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த புது நகர் காவல்துறையினர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு கைரேகை நிபுணர் அருண் தலைமையில் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.