கடலூர் காவலர் பயிற்சி பள்ளியில் 134 பெண் காவலர்களுக்கு காவலர் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்தனர். இதில், 10 பெண் பயிற்சி காவலர்கள், பயிற்சி அளித்த 4 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இவர்கள் அனைவரும் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். மற்ற 124 பயிற்சி பெண் காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இன்று 9 பெண் பயிற்சி காவலர்கள், பயிற்சி அளித்த காவலர்கள் நான்கு பேர் என 13 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.