கடலூர் உச்சிமேடு நியாய விலைக்கடை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் பிரசன்னா தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்திலிருந்து 1,200 லிட்டர் கள்ளச்சாராய பொட்டலங்களை மூட்டையில் கட்டி நூதன முறையில் கடத்தியது தெரியவந்தது.
1,200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்; காவல் துறை தீவிர வேட்டை - 1200 ILLICIT LIQUOR SEIZED
கடலூர்: 1,200 லிட்டர் கள்ளச் சாராயம் கடத்திய நபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து கள்ளச் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
1200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்; காவல்துறை தீவிர வேட்டை!
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தது, அரியாங்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் மணிகண்டன் (36) என்பது தெரியவந்தது. 1,200 லிட்டர் கள்ளச் சாராய பொட்டலங்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், மணிகண்டனைக் கைது செய்தனர். இவர் கடத்திவந்த கள்ளச் சாராயத்தின் மொத்த மதிப்பு 1.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.