தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்திரசாவடி அணை அருகே நீரில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழப்பு! - நீரில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழப்பு

கோயம்புத்தூர்: சித்திரை சாவடி அணை அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youths drown and dead near Chithrasawadi dam
நீரில் மூழ்கிய இளைஞர்கள்

By

Published : Oct 31, 2020, 1:24 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சித்திரை சாவடி அணை அருகே நீரில் இரண்டு இளைஞர்கள் குளித்திக்கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறையினர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் சுமார் மூன்று மணி நேரமாக போராடி இருவரின் உடலையும் மீட்டனர்.

இதையடுத்து, இருவரின் உடலையும் உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இருவரின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கரையில் இருந்த அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது அவர்கள் பெயர் தமிழ்செல்வன்(31), பிரபாகரன்(29) என்பதும் இருவரும் பாப்பாநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், இருவரும் குளிக்கச் சென்றபோது ஆழமான இடத்தில் மாட்டி கொண்டதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details