கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள கேரள எல்லை பகுதியை சேர்ந்தவர்கள் இரு சிறுமிகள். இவர்களை அதே பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் காதலிப்பதாக கூறி, கடந்த சில மாதங்களாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமிகளின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இளைஞர்கள் சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது உறுதியானது.