திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாகிருஷ்ணன் என்பவரது இளைய மகள் அபர்ணா (19). இவர் கோவை வ.உ.சி. பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரி படிப்பை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், அபர்ணா தனது உறவினரான கோவை காந்திபார்க் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் விஷ்ணுவை (21) மூன்று ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.
ஆனால் இவர்களது காதலை இருவீட்டாரும் ஒப்புக்கொண்டு, திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் இருவீட்டாரும் கடந்த 31ஆம் தேதியன்று கோவையில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்று திருமணம் குறித்து பேசியுள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் தனது மகளை திருமணம் செய்துகொள்ளும்படி விஷ்ணுவிடம் கேட்டுள்ளார். ஆனால் விஷ்ணுதான் சினிமாவில் நடிக்கப்போவதாகவும் இப்போது திருமணம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இதனால் கோபாலகிருஷ்ணனுக்கும் விஷ்ணுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஷ்ணு வீட்டிலிருந்த கத்தியை எடுத்து கோபாலகிருஷ்ணனைத் தாக்க முற்பட்டுள்ளார். அதைத் தடுக்கவந்த கோபாலகிருஷ்ணனின் இரு மகள்களையும் கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அபர்ணாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், விஷ்ணு மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் 7 அரசு அலுவலர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை