கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், நீண்ட நாள்களாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் சகோதரர், நாகராஜ் இருவரும் நண்பர்கள் என்பதால் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி நாகராஜ் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவரது பெற்றோர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில், அச்சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.