கோவை மாவட்டம், அரசூர் பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன். இவர் தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம் போல் கல்லூரி முடித்து வீடு திரும்பியபோது, அடையாளம் தெரியாத மூன்று பேர் வழி மறித்ததோடு, கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.
இதில் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வன் பயத்தில் சத்தம் போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வழிப்பறி கும்பல், தமிழ்ச்செல்வனின் இடது மார்பில் குத்திவிட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்தத் தமிழ்செல்வன் ரத்த காயங்களோடு வீடு திரும்பினார்.
அங்கு அவரை பார்த்து அதிர்ச்சியான தந்தை, உடனே மகனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே தமிழ்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (25), பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, மற்றோரு பைக்கில் வந்த 3 பேர் மகாலிங்கத்திடம் முகவரி கேட்பது போல் நிறுத்தினர்.
வழிப்பறி நடந்த பகுதியில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். அப்போது, திடீரென மகாலிங்கத்தின் முதுகில் குத்தி விட்டு அவரிடம் இருந்த செல்போன், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து தப்பியோடினர். காயத்தில் மகாலிங்கம் அலறிய சத்தம் கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி சென்றனர்.
அப்போது, மகாலிங்கத்தின் வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடினர். பின்னர் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மக்கள் மீதான கடனை அரசே செலுத்தும் - ஆர்.பி. உதயகுமார்