கோயம்புத்தூர்:பொள்ளாச்சி பத்ரகாளி அம்மன் கோயில் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 06) ஆறுமுகம் தனது தம்பி கிருஷ்ணமூர்த்தியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி கத்தியால் தனது அண்ணன் ஆறுமுகத்தை குத்தியுள்ளார்.
அண்ணனை கொலை செய்த தம்பி கைது:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஆறுமுகம் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, அண்ணனை கொலை செய்த கிருஷ்ணமூர்த்தியை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: அண்ணனை கொலை செய்த ரவுடி: பழிதீர்த்த தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது!