தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணிப்படுக்கையின் மேல் நின்று பறை இசைத்து இளம் பெண் கின்னஸ் சாதனை! - உலக சாதனை

தந்தையின் கனவை நனவாக்க ஆணிப்படுக்கையின் மேல் நின்று பறை இசைத்து நடனமாடி இளம் பெண் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

இளம் பெண் சாதனை
இளம் பெண் சாதனை

By

Published : Oct 4, 2020, 8:52 PM IST

கோயம்புத்தூர்: கிராமிய புதல்வ கலை குழுவில் பறையிசை பயின்ற இளம் பெண், ஆணி மேல் நின்று பறை இசைத்து சாதனை புரிந்துள்ளார்.

கிராமிய புதல்வ கலை குழுவில் பறையிசை பயின்று வருபவர் பூலுவாம்பட்டி பகுதியை சேர்ந்த அருள்மொழி. தமிழ்க் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று வரும் இவர், ஆணிப்படுக்கையில் நின்று ஒன்றரை மணி நேரம் பறை இசைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவரின் இந்த சாதனையை கோயம்புத்தூர் மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவரின் தந்தை சிறுவயதிலேயே இறந்த நிலையில், தந்தையின் கனவை நனவாக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக அருள்மொழி தெரிவித்துள்ளார்.

ஆணிப்படுக்கையின் மேல் நின்று பறை இசைத்து இளம் பெண் கின்னஸ் சாதனை!

இதையும் படிங்க: இடமில்லாமல் தொழில் முடக்கம்; இயற்கை நார் நெசவாளர்கள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details