கோயம்புத்தூர்: பந்தைய சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிறித்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முந்திரி, திராட்சை, பிஸ்தா உள்ளிட்ட 20 வகையான 150 கிலோ டிரை புரூட்ஸ் மற்றும் 20 வகையான வெளிநாடு மற்றும் இந்திய மது வகைகள் சேர்த்து கேக் மிக்ஸிங் தொடங்கப்பட்டது.
Christmas: கோவையில் தயாராகும் 600 கிலோ மெகா கேக்! - How to Christmas cake preparation
கிறித்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவையில் 600 கிலோ மெகா கேக் செய்யும் பணி தொடங்கியது.
தொடர்ந்து ஹோட்டலின் கோவை பொது மேலாளர் சுமஞ்சு திவாரி மற்றும் தலைமை செப் சரத் சந்திர பேனர்ஜி ஆகியோர் கூறுகையில், "மொத்தம் இந்த ஆண்டு பண்டிகைக்காக சுமார் 600 கிலோ கேக் தயார் செய்ய உள்ளோம். இந்த மிக்ஸிங் ஒரு ஆண்டு முழுவதும் பதப்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு கேக் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட மிக்ஸிங், இந்த ஆண்டு டிசம்பர் 20ல் விற்பனைக்கு வர உள்ளது" என்றனர்.
இதையும் படிங்க:உணவு சுத்தமாக சமைக்கப்படுவதை கண்காணிக்க சிசிடிவி வைக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்