தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு! - crime news

பொள்ளாச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு
மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு

By

Published : May 26, 2021, 1:14 PM IST

கோவை: பொள்ளாச்சி நகர்புற ஊத்துக்காடு பகுதியில் உள்ளது ரோடுசபரி கார்டன். இங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் கிழக்கு காவல் நிலைய காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடலில் சிறுசிறு காயங்கள் இருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:நடத்தையில் சந்தேகம்: கணவன் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி!

ABOUT THE AUTHOR

...view details