கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் கள்ளிப்பட்டி கிராமத்தில் மட்டும் 850 வாக்குகள் உள்ளன. இங்கு ஊராட்சித் தலைவர் பதவிக்காக அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுகவைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், தேர்தல் பரப்புரைக்காக வீடுகளின் கதவுகள், தெருக்களில் உள்ள மின் கம்பங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ சின்னம் பதிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். இந்த ஸ்டிக்கரானது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஒட்டி உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.